1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்துதல் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டிற்காக 10 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.
நெடுந்தீவு மகா வித்தியாலயம், வேலணை மத்திய கல்லூரி, ஊர்காவற்றுறை சென். அந்தோனியார் கல்லூரி, காரைநகர் இந்துக் கல்லூரி, வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி, தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, ஸ்கந்தவரோதயா கல்லூரி, ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி, புத்தூர் மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை, உடுத்துறை மகா வித்தியாலயம் என்பவையே யாழில் தேசியப் பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளாகும்.