பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்று (05.10.2021) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 அளவில் மெய்நிகர் இணைய வழி மூலம் இடம்பெற்ற கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் இணைந்திருந்தார்.
இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு வட மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையின் அனைத்து மாகாண ஆளுநர்களினாலும் கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் இம்மாதம் 21ம் திகதி 200 மாணவர்களுக்குட்பட்ட தரம் 1-5 வரையிலான வகுப்புக்களை கொண்டமைந்துள்ள வட மாகாணத்தில் உள்ள 680 பாடசாலைகளினை மீள ஆரம்பிக்கமுடியும் என தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் அனைத்து மாகாண ஆளுநர்கள்,பிரதம செயலாளர்கள் மற்றும் கல்வி செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.