தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசனுக்கும் அம்பாறையில் இராணுவத்தினருக்குமிடையே தம்பிலுவில் சோதனைச்சாவடியில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
திருக்கோவில் பிரதேசத்திலுள்ள மக்களை சந்திக்க சென்ற போது, சோதனைச்சாவடியில் நின்ற இராணுவத்தினர் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனின் வாகனத்தை சூழ்ந்து அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதுடன் அவரை கீழே இறங்குமாறும் சத்தமிட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து வாகனத்தையும் சோதனையிட்டுள்ளனர். அத்துடன் திருக்கோவில் பிரதேத்திற்கு செல்லமுடியாது என்றும், இராணுவத்தினர் தடுத்துள்ளனர்.