அமெரிக்காவின் டெக்சாஸ் ஃபோர்ட் வொர்த் பகுதியில் அதிக பனிப்பொழிவு காரணமாக சுமார் 75 – 100 வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து நேற்று (11.02.2021) விபத்திற்குள்ளாகியுள்ளன. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
வீதியில் இருந்த அதிக பனி காரணமாக கனரக வாகனங்கள் சில கட்டுப்பாட்டை இழக்க, அவை மற்றைய வாகனங்களுடன் மோத, அந்த பகுதியில் நிலைமையை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டதாக ஃபோர்ட் வொர்த் தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் மைக்கேல் டிரிவ்டால் தெரிவித்துள்ளார்.
விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 36 பேர் வரையில் உள்ளூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாகனங்களை அகற்றி வீதிப் போக்குவரத்தை சீர் செய்ய நீண்ட நேரம் பிடித்தது. சேதமடைந்த வாகனங்களை மதிப்பிட மேலும் சில நாட்களாகுமென பொலிசார் தெரிவித்துள்ளனர்.
படங்கள் – ap, Jason McLaughlin