பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸின் தந்தை கடந்த 02.02.2021 ஆம் திகதி திடீரென்று உடல்நலக்குறைவால் காலமாகிவிட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 ஆவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய இவர் 2017 ஆம் ஆண்டு மிஸ்டர் இந்தியா பட்டம் வென்றார்.
பிரபல ரிவியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற பாலாஜியின் தந்தையின் மரணத்திற்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
இப்படியான நிலையில் பாலாஜி முருகதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் “இதுவும் கடந்து போகும்”என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே போல கடந்த ஆண்டு பிக் பாஸ் போட்டியாளர்களான முகேன் மற்றும் லாஸ்லியாவின் தந்தை காலமாகி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலாஜியின் தந்தை இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் ஆரி, பாலாஜியின் தந்தை குறித்து உருக்கமான ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
குறித்து பாலாஜி முருகதாஸின் தந்தையின் மறைவைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். இந்த கடினமான தருணங்களில் குடும்பத்திற்கு பலமும் தைரியமும் பெறட்டும் என்று பதிவிட்டுள்ளார்.