கிரேக்க நாட்டின் முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனையான சொபியா பெக்காதோரு தனக்கு நேர்ந்த பாலியல் துஸ்பிரயோகத்தினை மீ டூ விழிப்புணர்வின் மூலம் (#MeToo) வெளிப்படுத்தியுள்ளார்
ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கத்தையும் பெய்ஜிங் 2008 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் வெண்கலப் பதக்கத்தையும் சொபியா தனதாக்கியவராவார்
‘தனக்கு 21 வயதாக இருந்தபோது சிரேஷ்ட சம்மேளன உறுப்பினர் ஒருவர் அவரது ஹொட்டெல் அறையில் வைத்து தன்னை பாலியல் துன்புறுத்துலுக்குள்ளாக்கியதுடன் துஷ்பிரயோம் செய்ததாக, இரண்டு தடவைகள் ஒலிம்பிக் பதங்கங்களை வென்ற சொபியா பெக்காதோரு (43 வயது) தெரிவித்துள்ளார்.
சிட்னி 2000 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான திறன்காண் போட்டி நடைபெற்ற பின்னர் இந்தத் துன்பம் தனக்கு நேர்ந்ததாக அவர் குறிப்பிட்டார். அவர் முதன்முதலில் மாரி க்ளயார் சஞ்சிகைக்கு தனக்கு ஏற்பட்ட கதியை வெளிப்படுத்தினார். அதன் பின்னர் அரச ஆதரவுடன் கடந்த வாரம் நடைபெற்ற டெலிகொன்பெரன்ஸில் தனக்கு நேர்ந்த கதியை வெளிப்படுத்தினார்.
பல தசாப்தங்களுக்கு முன்னர் இந்த சம்பவங்கள் இடம்பெற்றதால் அந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வழக்கு தொடர முடியாது எனத் தெரிவிக்கப்படுகின்றது. இது இவ்வாறிருக்க, பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளான மற்றையவர்கள் தகவல் வெளியிடுமாறு ஹெலெனிக் ஒலிம்பிக் குழுவும் அரசாங்கமும் கோரியுள்ளன.