பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலையை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போது மேற்படி நான்கு பொருட்களின் விலையை அதிகரிப்பது தொடர்பில் வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவு சம்பந்தமாக ஆராயப்பட்டது. எனினும், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
ஒரு கிலோ பால்மாவின் விலை 200 ரூபாவாலும், ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 10 ரூபாவாலும், சமையல் எரிவாயுவின் விலை 550 ரூபாவாலும், சீமெந்து மூடையொன்றின் விலை 50 ரூபாவாலும் அதிகரிக்கப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.