விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ஒரு சீரியல்தான் செந்தூரப் பூவே சீரியல். இந்த சீரியலானது கடந்த ஆண்டு ஜூலை 27 ஆம் திகதி துவங்கி ஒளிபரப்பாகி வருகின்றது.
இந்த சீரியலில் ஹீரோவாக நடிகர் ரஞ்சித் நடித்து வருகிறார், ஹீரோயினாக ஸ்ரீநிதி நடித்து வருகிறார்.
மேலும் ரஞ்சித்தின் முதல் மனைவி பிரியா ராமன் செந்தூரப்பூவே சீரியலில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
மேலும் இந்த சீரியலில் நிவாஷினி, திவ்யதர்ஷினி, சாந்தி வில்லியம்ஸ், ஸ்ரீ துர்கா, பாபு, பெரோஸ் கான், பாண்டி ரவி எனப் பலரும் நடித்து வருகின்றனர்.
இந்த சீரியலில் தற்போது பேய், மந்திரவாதம் என்பது போன்ற பல காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.
இந்தநிலையில் செந்தூரப்பூவே சீரியல் 3 மாதங்களுக்கு நிறுத்தப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிக் பாஸ் 5 நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ளதையடுத்து இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செந்தூரப் பூவே சீரியல் நிறுத்தப்படுவதுடன் மௌன ராகம் 2 சீரியல் மாலை 7 மணிக்கும், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் 6.30 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது