பிக்பாஸ் தொடர் ஆரம்பமாகி இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த நிலையில் போட்டியாளர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது.
இந்த வாரம் வெளியேறி சென்ற போட்டியாளர்கள் வீட்டுக்கு உள்ளே மீண்டும் திரும்பவும் வந்து போட்டியாளர்களுக்கு மிகுந்த உச்சாகத்தை கொடுத்துள்ளனர். இருப்பினும் போட்டியின் கடைசி நேரத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு போட்டியிலிருந்து விலக ஹவுஸ்மேட்ஸ்களுக்கு ஒரு வாய்ப்பை பிக்பாஸ் வழங்குவார்.
கடந்த சீசனில் கூட ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டு கவின் போட்டியிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த சீசனிலும் அப்படி ஒரு வாய்ப்பு ஹவுஸ்மேட்ஸ்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த சீசனில் ஆரி, பாலாஜி, ரியோ, சோம், கேபி மற்றும் ரம்யா ஆகிய 6 பேர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இறுதிப்போட்டிக்கு செல்லும் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பிக்பாஸ் ஒரு குறிப்பிட்ட தொகையை அறிவித்து அந்த தொகையை பெற்றுக் கொண்டு வெளியேற விருப்பமுள்ளவர்கள் வெளியேறலாம் என்று பிக்பாஸ் அறிவிக்க இருப்பதாகவும் ரம்யா அந்த தொகையை பெற்றுக்கொண்டு வெளியேற முடிவு செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
source: daily.tamilnadu