கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தமைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய நாட்டில் அனுமதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றில் அறிவித்தார்.
கொரோனா தொற்று நீர்வழியாக பரவாது என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்ததை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கும் தகனம் செய்வதற்கும் ஒப்புதல் வழங்கப்படும் என கூறினார்.
பிரதமரின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பளிப்பதாக முன்னதாக அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தனது ருவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே பிரதமரின் இந்த முடிவை தானும் வரவேற்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.