பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சபாநயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கும் இடையிலான சந்திப்பு 24/01/2021 அன்று நடைபெற்றது.
இதன்போது பாராளுமன்ற அமர்வுகளை முன்னெடுத்துச் செல்வது உள்ளிட்ட விடயங்கள் குறிப்பாக கலந்துரையாடப்பட்டன.
அதேநேரம், பாராளுமன்றத்தில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.