பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நலமாக அவருடைய விஜேரம உத்தியோக பூர்வ இல்லத்தில் தங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
பிரதமருக்கு உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து அவர் சிங்கப்பூருக்கு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், அந்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்பதோடு 24/01/20121 அன்று காலையில் சபாநாயகரைச் சந்தித்ததை அடுத்து மேலும் பல சந்திப்புக்களில் அவர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் துணைவியாரான சிரந்திர ராஜபக்ஷவின் 68ஆவது பிறந்த தினமாகும் 1953ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் திகதி அவர் ஜனனமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.