பிரிட்டனில் இருந்து வருபவர்கள், தடுப்பூசி போட்டிருந்தாலும் இந்தியாவில் 10 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்வதை கட்டாயமாக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
சில நாட்களுக்கு, முன்னர் பிரிட்டன் அரசு வெளியிட்ட வெளிநாட்டு பயண வழிகாட்டுதல்களில், அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பட்டியலில் கோவிஷீல்ட் தடுப்பூசி இடம் பெறவில்லை.
இரண்டு, முறை கோவிஷீல்ட் தடுப்பூசி போட்ட இந்திய பயணிகளை தடுப்பூசி போட்டவராக கருதமுடியாது என்றும், வரும் 4ம் நாள் முதல் பிரிட்டன் வரும் இந்திய பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பதிலடி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், பிரிட்டனின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வரும் 4ம் திகதி முதல், பிரிட்டனில் இருந்து இந்தியா வருபவர்கள் தடுப்பூசி போட்டிருந்தாலும், இந்தியாவில் அவர்கள் தங்கியிருக்கும் இடம் அல்லது வீட்டில் 10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்று இந்திய அரசு, கூறியுள்ளது.