ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரின்போது, இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் நடவடிக்கைகளைப் பிரித்தானிய இம்முறை புதிய பிரேரணை ஊடாக முன்னெடுக்கும். பொறுப்புக்கூறல் கடமையில் இருந்து இலங்கை ஒருபோதும் நழுவ முடியாது.” என இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர்சாரா ஹல்டன் தெரிவித்தார்.
இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகரின் அழைப்புக்கிணங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் கொழும்பில் அவரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கை அரசின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் விதமாகத் தயாரிக்கப்படும் புதிய வரைபு தொடர்பில், தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தப்படுகின்றது எனவும் சுமந்திரன் எம்.பியிடம் அவர் மேலும் தெரிவித்தார்.