எதிர்வரும் 27 ஆம் திகதி நாட்டிற்கு கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்யப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
களுத்துறை – வலல்லாவிட்ட பகுதியில் 23/01/2021 அன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
அதற்கமைய, இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கொரோனா தொற்று ஒழிப்பு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளேயிடம் வினவியபோது, இந்தியாவின் Serum நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் Oஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியே எதிர்வரும் புதன்கிழமை நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அவர் கூறினார்.
சுகாதார துறையினர், இராணுவத்தினர், பொலிஸார் உள்ளிட்ட கொரோனா தடுப்பு செயற்பாட்டில் முன்னின்று செயற்படுவோருக்கு முதற்கட்டமாக தடுப்பூசியை ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.