சீனாவின் ஏவுகணை பயிற்சிக்கான கட்டுமானப் பகுதிகளில் அண்மையில் எடுக்கப்பட்ட செயற்கைகோள் புகைப்படங்களை பகுப்பாய்வு செய்ததில் அந்த நாடு புதிய அணு ஏவுகணைகளை நிலத்தடி குழிகளில் இருந்து ஏவுவதற்கான திறனை வேகமாக அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீன நாடுகளின் அணு ஆயுத திட்டங்களை நீண்டகாலமாக கண்காணித்து வரும் அமெரிக்க ஆய்வாளர் ஹான்ஸ் கிறிஸ்டென்சென் (Hans Kristensen) இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஹான்ஸ் கிறிஸ்டென்சென் (Hans Christensen) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அண்மைக் காலமாக அமெரிக்காவிடமிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஏதுவாகவே சீனா அணு ஆயுத பலத்தை அதிகரிப்பதில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.
அதேபோன்று, சீனா அணு ஆயுதங்களை நவீனமயப்படுத்தி வருவதை சுட்டிக்காட்டி அமெரிக்காவும் அடுத்த இருபது ஆண்டுகளில் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்கள் அனைத்தையும் நூற்றுக்காணக்கான பில்லியன் டொலர்கள் செலவில் புதிதாக கட்டமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.