புரவி புயல் காரணமாக இலங்கையில் பாரிய சேதங்கள், அனர்த்தங்கள் எதுவும் பதிவாகவில்லையென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மரங்கள் முறிந்து விழுந்தமை, பலத்த காற்று, மழை பற்றிய அறிக்கைகளே கிடைத்துள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.
புரவியின் தாக்கம் உள்ள பகுதிகளில் பலத்த காற்று மற்றும் பலத்த மழை தொடர்ந்து பதிவாகி வருவதாகவும், அந்த பகுதிகளிலுள்ள மக்களிற்கு உதவும் நடவடிக்கையில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
புரவியால் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணியாளர்கள், முப்படையினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.