கேகாலையில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று கூடியமையினால் குழப்ப நிலை ஏற்பட்டது.
இன்று இலவசமாக 5000 குடும்பங்களுக்கு கொரோனா மருந்துப் பானம் வழங்குவதாக கேகாலை – ஹெட்டிமுல்ல ஆயுர்வேத வைத்தியரான தம்மிக்க பண்டார அறிவித்திருந்தார்.
இதனையடுத்து பெருந்தொகையான மக்கள் அவரின் வீட்டினை முற்றுகையிட்டுள்ளனர்.
இதனையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த பெருமளவு பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த, தான் கண்டுபிடித்துள்ள ஆயுர்வேத பானம் வெற்றியளித்துள்ளதாக குறிப்பிட்ட மருத்துவர் அண்மையில்அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.