பொத்துவில் முதல் பொலிகண்டி வரையாக பேரெழுச்சிப் பேரணி, சுயலாப நோக்கத்திற்காக இடம்பெருவதாகவும் இதனால் எதுவும் நடக்க போவதில்லை என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (06.02.2021) தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர்,
தங்களுடைய சுய லாப அரசியலுக்காகவே இந்த போராட்டங்களை மேற்கொள்கின்றனர். ஒரு கல்லில் பல மாங்காய்களை அடிக்கப் பார்க்கின்றார்கள்.
ஒரு வகையில் அரசாங்கத்திற்கு தென்னிலங்கையில் வலுச்சேர்க்கின்றார்கள், இன்னொரு வகையில் உலகத்திற்கு காட்ட முனைகின்றார்கள் இந்த அரசாங்கங்கத்திற்கு எதிராக போராட்டங்களை மேற்கொள்கின்றோம் என்றும், மற்றும் ஒரு பக்கம் மக்களிடம் வாக்குகளை அபகரிக்க முனைகின்றார்கள் என்று குற்றம் சாடியுள்ளார்.
மேலும் இந்தப் பேரணி மூலம் மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.