பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெறுகின்ற பேரணியை குழப்புவதற்கு யார் எத்தகைய தாக்குதலை நடத்தினாலும், நாம் அஞ்சப்போவதில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டுள்ள வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளதாவது:
திருகோணமலை மடத்தடி சந்தியிலேயே வைத்து நானும் அனந்தி சசிதரனும் பயணம் செய்துகொண்டிருந்த வாகனத்தின் மீது தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கண்ணாடிகள் உடைத்தெறியப்பட்டுள்ளன.
அவர்களுடைய கைகளிலே பெற்றோல் நிரப்பிய போத்தல்கள் காணப்பட்டன. பொலிஸார் பக்கத்திலே நிற்கின்ற போதுதான் இந்தத் தாக்குதல் இடம்பெற்றது. விழவிழ எழுவோம் வீறுகொண்டு எழுவோம் என்ற அடிப்படையிலே நாங்கள் இந்தப் பயணத்தை நிச்சயமாக தொடர்வோம்.
இனவெறி மதவெறி தாக்குதல்களுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சமாட்டோம்- என்றார்.