வடக்கில் விஸ்வரூபம் எடுத்துவரும் தமிழன அழிப்பிற்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தமிழ் பேசும் மக்கள் அணிதிரளவேண்டுமென வடக்குகிழக்கு சிவில் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இது தொடர்பில் வடக்குகிழக்கு சிவில் அமைப்புகள் தெரிவித்துள்ளதாவது,
வடக்குகிழக்கில் பூர்வீககுடிகளான நாம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக எங்களது சுயநிர்ணய உரிமைக்காக போராடி வருகின்றோம்.ஆனால் தமிழர்களின் போராட்டத்திற்கு செவிசாய்க்காத இலங்கை அரசு தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீதான கட்டமைக்கப்படட இன அழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதை நாம் யாவரும் அறிவோம்.
யுத்தம் முடிவடைந்து பத்து ஆண்டுகளில் வடக்குகிழக்கை இராணுவமயமாக்கி வரும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் கலாச்சார பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதுடன் வடக்குகிழக்கின் பூர்வீக குடிகளான தமிழர்களின் இனப்பரம்பலில் மாற்றத்தை உருவாக்கி அவர்களது இருப்பை இல்லாமல்; செய்வதற்காக பலவகையிலும் கட்டமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.
இனஅடிப்படையில் தொல்பொருள் திணைக்களம் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்திசபை ஊடாக பௌத்தமயமாக்கல் திட்டங்களை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது. இதன்மூலம் வடக்கில் குறூந்தூர் மலை ஐயனார் கோவில்,வெடுக்குநாறிமலை சிவன் கோயில் கிழக்கில் கன்னியா பிள்ளையார் ஆலயம் உட்பட பல ஆலயங்கள் நமது பாரம்பரிய கலாச்சார சமய வழிபாடுகளை செய்ய முடியாதவாறு ஆக்கிரமிப்புசெய்யப்படுவதோடு அங்கு பௌத்த ஆலயங்களை நிறுவுவதற்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. மேலும் வடக்குகிழக்கில் உள்ள 20 பாரம்பரிய இந்து ஆலயங ;களை கையகப்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.
இவ்வாறு தமிழ்பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உட்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளிற்கு எதிராகவும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடக்குகிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் அனுப்பிவைத்துள்ள கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த கோரியும் வடக்குகிழக்கு சிவில் அமைப்புகளாகிய நாம் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டமொன்றை மூன்றாம் திகதி முதல் ஆறாம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளன.
இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள சிவில் அமைப்புக்களின் விபரங்கள் வருமாறு,
- வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகள்.
- வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோh் உறவுகளின் சங்கம்.
- அரசு சாரா தொண்டு நிறுவணங்களின் இணையம் கிளிநொச்சி.
- கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம்.
- யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம்.
- அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு.
- சிவகுரு ஆதீனம் யாழ்ப்பாணம்.
- தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மட்டக்களப்பு.
- மறுமலர்ச்சி பெண்கள் அமைப்பு மட்டக்களப்பு.
- மட்டக்களப்பு மாவட்ட பல் சமயங்களின் ஒன்றியம்.
- மட்டக்களப்பு மாவட்ட முதியோர் அமைப்புக்களின் சம்மேளனம்.
- தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு மட்டக்களப்பு.
- வெண்மயில் அமைப்பு மட்டக்களப்பு.
- The American ceylon mission batticaloa.
- தாய் நிலம் அறக்கட்டளை யாழ்ப்பாணம்.
- குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலயம் முல்லைத்தீவு.
- வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ் வரர் ஆலயம் வவுனியா வடக்கு.
- சமூகமட்ட அமைப்புக்களின் சம்மேளணம் கிளிநொச்சி
- ஸ்ரீ சித்தி வினாயகர் ஆலயம் வேற்றுச்சேனை வெல்லா வெளி மட்டக்களப்பு
- தென்கைலை ஆதீணம் கண்ணியா திருகோணமலை
- தமிழர் மரபுரிமை பேரவை முல்லைத்தீவு