மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலம் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கச்சக்கொடி சுவாமிமலை, கெவிளியாமடு பகுதிகளை அண்டிய காத்தமல்லியார்சேனை வெட்டிப்போட்டசேனை, விக்சிச்தோட்டம், மணல் ஏற்றம் ஆகிய இடங்களை அண்டிய மேச்சல்தரைக்காக ஒதுக்கப்பட்ட காணிகளில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் முந்திரி செய்கை பண்ணுவதற்காக்கூறி பல நூற்றுக்கணக்கான மேச்சல்தரை காணிகள் அபகரிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன், மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் சி.புஷ்பலிங்கம், பிரதேச சபை உறுப்பினர்களான அருட்செல்வம், கிரேஷ், லோகிதராசா ஆகியோர் கெவிளியமடு பகுதிகளை ,இன்று சுற்றி பார்வையிட்டனர்.



அங்கு சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மாடு வளர்க்கும் பண்ணையாளர்கள் தமது மாடுகள் மேய்க்கும் மேச்சல் தரையில் கடந்த மூன்று தினங்களாக வேலிகள் போட்டு பெரும்பான்மை இனத்தை்சேர்ந்த ஊர்காவல் படையினர் காடுகளை வெட்டி நிலத்தை துப்பரவு செய்தவற்றை நேரடியாக காண்பித்தனர்.
ஊர்காவல்படையினர் கறுப்பு சட்டைகளுடன் காணிகளை துப்பரவு செய்தமையை காணமுடிந்தது. இது விடயங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என மாடு வளர்ப்பு பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.