மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் புனாணைப் பகுதியில் இன்று (29.01.2021) தனியார் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பஸ்ஸிலிருந்த 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு அவர்களில் 3 பேர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பஸ் இன்று காலை 6.30 மணியளவில் புனாணைப் பிரதேசத்தில் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டபோது வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக மேற்கொண்டு வருகின்றனர்.