மணல் விலையை கட்டுப்பாட்டில் கொண்டு வர அரசாங்கத்தின் தலையீடு அவசியமென சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
மணல் வியாபாரத்தில் ஈடுபடும் சங்கங்கள் சிலவற்றுடன் இன்று முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் முழுமையான தலையீட்டுடன் மணல் விநியோகம் இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி செயலணி பரிந்துரைத்துள்ளது.
14,000 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படும் மணல், சந்தைகளில்55,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது என தெரிவித்தார்.