கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 06 ஆவது பாராளுமன்ற உறுப்பினர் இவராவார்.
கடந்த 19 ஆம் திகதி இவர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்ததாக பாராளுமன்ற நிர்வாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதனால் CCTV காணொளி பதிவுகளை ஆதாரமாக கொண்டு அவருடன் தொடர்புகளை பேணியவர்களை ஆராயும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தயாசிறி ஜெயசேகர, ரவூப் ஹக்கீம், வாசுதேவ நாணாயக்கார, பியல் நிஷாந்த மற்றும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.