இலங்கை மின்சார துறை தொடர்பில் அமெரிக்காவின் நிவ் போட்ரஸ் நிறுவனத்துடன் இன்று (12) மற்றொரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக இந்த புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக நிவ் போட்ரஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஒப்பந்தம் தொடர்பில் நாட்டுக்கு வெளிப்படுத்தாவிட்டால், பாரிய தொழிற்சங்க போராட்டம் நடத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது