எதிர்வரும் 10 அல்லது 11 ஆம் திகதியில் இலங்கைக்கு 50,000 மெற்றிக் தொன் பெற்றோல் மற்றும் 10,000 மெற்றிக் தொன் மண்ணெண்ணெய்யை வழங்கவுள்ளதாக மலேஷிய நிறுவனம் ஒன்று உறுதிப்படுத்தியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் தகாஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மலேஷிய அரசாங்கமும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
குறித்த மலேஷிய நிறுவனம் 50,000 மெற்றிக் தொன் பெற்றோலை இரண்டு கட்டங்களாக இலங்கைக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.