மலையகத்தில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளுக்கு கடும் மழை பெய்து வருகிறது.
ஹட்டன்-கொழும்பு மற்றும் ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதிகளில் மழையுடன் அடிக்கடி பனி மூட்டமும் நிலவி வருவதால், இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், அதிக மழை காரணமாக மேல் கொத்மலை, கெனியோன், லக்ஸபான, நவலக்ஸபான, காசல்ரீ, விமலசுரேந்திர, மவுசாகலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் நீர் மட்டமும் மிக சடுதியாக உயர்ந்து வருகின்றன. இதனால் நீர்த்தேக்கங்களுக்கு கீழ் தாழ்நிலப் பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.