சக்தி – சிரஸ – MTV ஊடக குழுமங்களின் உரிமையாளரும் கபிட்டல் மகாராஜா நிறுவனத்தின் கூட்டுப்பணிப்பாளருமான “கிளி” ராஜமகேந்திரன் காலமானார்.
கோவிட் தொற்றுக்கு உள்ளாகி பத்து நாட்களாக நவலோகா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த இவர், கடந்த மூன்று நாட்களாக கோமா நிலைக்கு சென்றிருந்தார்.
மகாதேவா – ராஜேந்திரன் (யாழ்ப்பாணம் – மானிப்பாய்) ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட மகாராஜா நிறுவனத்தை, 1983 ற்குப்பின்னர், ராஜேந்திரத்தின் மகன் ராஜமகேந்திரன் நடத்திவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜேந்திரத்தின் இன்னொரு மகன் மகாராஜா மெல்பேர்னை சேர்ந்தவர்.
.