மாங்குளம் – செல்வபுரம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இ.போ.ச பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
காலியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்து இன்று (06.02.2021) அதிகாலை 03.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான பேருந்து வீதி அருகில் உள்ள தனியார் காணி ஊடாக பயணித்துள்ளது. எனினும் அவ்விபத்தின்போது பயணித்த பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.