பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கம் மடிக்கணனி இலவசமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அதற்காக பதிவு செய்வதற்கும் சந்தர்ப்பம் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் போலியாதென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு மடிக்கணனி வழங்குவது தொடர்பில் அமைச்சினால் அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மிகவும் பயனுள்ளதாகவும், இலகுவாகவும் மேற்கொள்வதற்காக டிஜிட்டல் கல்வி உதவியாக மடிக்கணனி வழங்குவதற்கு கல்வி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய பின்தங்கிய கிராமிய பாடசாலைகளில் தரம் 6 முதல் 11 வரையிலான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மடிக்கணனி வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணனி வழங்குவதாகவும் அதற்கான விண்ணப்பம் ஒன்று வட்ஸ்அப் மூலம் பகிரப்படுகின்றது. அதனை நம்ப வேண்டாம் என கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்படும் விடயங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.