தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய இறுதியாக மாஸ்டர் படம் உலகளவில் வெளியாகி கோடிக்கணக்கில் வசூல் செய்துள்ளது. சுமார் 50 கோடிக்கும் மேல் ஒரு படத்திற்கு சம்பளமாக வாங்கி வருகிறார். அப்படி மாஸ்டர் படத்திற்கும் நடிகர் விஜய் சுமார் 80 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் படம் வெளிவராததால் சம்பளத்தை குறைத்துக் கொண்டாரா தளபதி என்ற கேள்வியை தயாரிப்பாளர்களிடம் கேட்டு வந்தனர். அப்படி இருக்க நடிகர் விஜய் 80 கோடி சம்பளம் வாங்கியிருப்பது தயாரிப்பாளர்களுக்கு ஷாக்காகியுள்ளது.
இதுபற்றி தயாரிப்பாளரும் விஜய்யின் நெருங்கிய உறவினருமான சேவியர் பிரிட்டோ கூறுகையில், பொருளுக்கும் பிராண்டிங் தகுந்தாற்போல் பண மதிப்பு உண்டு. அதாவது வெள்ளி, தங்கம், வைரம் என்று எடுத்துக்கொண்டால் மதிப்பிற்கேற்ப விலையில் மாற்றங்கள் இருக்கும்.
அதேபோல் தான் தளபதி விஜய் உழைப்புக்கும், அவருக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் புகழுக்கு, மரியாதைக்கும் அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் சரியானது தான். அவர் கேட்ட சம்பளத்தை கொடுப்பது தான் மரியாதையும் .
சினிமாத்துறையில் கோடிக்கணக்கான ரசிகர்களை குவித்து வைத்துள்ள தளபதி விஜய் தற்போதைய மார்க்கெட் என்னவோ அதைத்தான் நாங்களும் செஞ்சிருக்கோம் என்பது போன்ற தெரிவித்துள்ளார்.
மேலும், விஜய் சேதுபதிக்கு 10 கோடியும், லோகேஷ் கனகராஜிற்கு 2 கோடியும், அனிருத்திற்கு 3.5 கோடியும் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.