தைப்பொங்கல் தினத்தன்று வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது.
லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய இப்படம் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்த போதிலும் மாஸ்டர் படத்தை ரசிகர்கள் விழா போன்று கொண்டாடினார்கள்.
படத்தை பார்த்த பலரும் பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படம் சரியான விருந்தாக அமைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளனர். விஜய் இந்நிலையில் மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் முதல் நாளில் ரூ.1.21 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நன்றி – மாலைமலர்