குருநாகல் – ரம்புக்கனா பிரதான சாலையில் உள்ள கட்டூபிட்டி பகுதியில் நேற்று இரவு (08.02.2021) கார் ஒன்று உயர் மின்னழுத்த மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மதுபோதையில் வாகனத்தில் பயணித்த மூவர், சுயநினைவிழந்து காரை சாலையில் இருந்து விலகி, அருகிலுள்ள உயர் மின் கம்பத்தில் மோதியதில் தீப்பிடித்தது.
தீ விபத்தில், வாகனத்திலிருந்தவர்கள் குதித்து உயிர் தப்பியுள்ளனர். ஆனால் உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் வாகனம் மோதி எரிந்தது சாம்பலாகியுள்ளது.
இத் தீ விபத்தால் கார் முற்றிலுமாக தீக்கிரையாகியமையுடன் மின்சார கம்பமும் முழுமையாக சேதமடைந்தது.
விபத்து நடந்த நேரத்தில் காரில் இருந்த மூன்று பேரில் இருவரை பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக கைது செய்ய பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நேரத்தில் ஒருவர் தப்பி ஓடியதால் மற்ற சந்தேக நபரை பொத்துஹேரா பொலிஸார் தற்போது தேடி வருகின்றனர்.