மின்சாரம் தாக்கிய 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சின்ன ஊறணி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் வீட்டில் மின் இணைப்பு வேலைகள் இடம்பெற்றுவரும் நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டுக்குள் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கிய நிலையில் வீழ்ந்து கிடந்ததை கண்ட உறவினர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து நிலையில் இருந்ததாக வைத்தியசாலை நிருவாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைவாக சடலத்தை பார்வையிட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு சட்ட வைத்திய அதிகாரியிடம் கேட்டுக்கொண்டதற்கு அமைய உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.