மியன்மர் நாட்டில் ஆங் சான் சூசி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஓராண்டுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டிருப்பதாக இராணுவம் அறிவித்துள்ளது.
நாட்டை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள இராணுவம், ஓராண்டுக்கு இது நீடிக்கும் என தெரிவித்துள்ளது.
இதேவேளை மியன்மரில் இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் அதிகாரத் தலைவராக இருந்துவரும் ஆங் சான் சூகியை இராணுவம் சிறைப்பிடித்துள்ளது.
அத்தோடு, ஆங் சான் சூகி உள்ளிட்ட மேலும் சில தலைவர்களும் இராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தேர்தலில் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி அறிவித்தது.
75 வயதான சூகி இதுவரை நாட்டின் மிக மேலாதிக்க அரசியல்வாதி ஆவார், மேலும் இராணுவ ஆட்சிக்கு எதிராக பல தசாப்தங்களாக வன்முறையற்ற போராட்டத்தை நடத்திய பின்னர் நாட்டின் தலைவரானார்.
நவம்பர் தேர்தலில் பாராளுமன்றத்தின் கீழ் மற்றும் மேல் சபைகளில் 476 இடங்களில் 396 இடங்களை சூ கியின் கட்சி கைப்பற்றியது,
ஆனால் 2008 இராணுவம் தயாரித்த அரசியலமைப்பின் கீழ் மொத்த இடங்களில் 25 சதவீதம் இராணுவம் கொண்டுள்ளது மற்றும் பல முக்கிய அமைச்சர் பதவிகளும் இராணுவத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.