இலங்கை மீனவர் ஒருவர் உட்பட இந்திய மீனவர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளமை அதிர்ச்சியடைந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
உயிரிழப்புகளுக்கு எங்கள் கவலையை வெளியிட்டுள்ளோம். மீனவர்கள் விவகாரத்தை மனிதாபிமான முறையில் கையாளவேண்டும். இருநாடுகளிற்கும் இடையில் இந்த விவகாரம் குறித்து காணப்படும் புரிந்துணர்வை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கான தீவிர முயற்சிகளை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் இந்த சம்பவம் குறித்து கடும் கண்டனத்தினை வெளியிட்டுள்ளார்.
மேலும் புதுடில்லிக்கான இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகரை அழைத்து கடும் கண்டனமும் வெளியிடப்பட்டுள்ள தாக அறிய முடிகின்றது.