பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் தொடர்பில் இன்று (05) முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் காரணத்தால் மலையகம் முடக்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவ பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதோடு, ஹட்டன், பொகவந்தலாவ பகுதிக்கான போக்குவரத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மாத்திரம் சேவையில் ஈடுபட்டுள்ளதோடு, தனியார் பேருந்துகளின் சாரதிகள், முச்சக்கர வண்டி சாரதிகள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
பொகவந்தலாவ பகுதியில் உள்ள அனைத்து தேயிலை தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. பெருந்தோட்ட தொழிலாளர்கள் அனைவரும் வீட்டில் இருந்தவரே ஹர்த்தாலை முன்னெடுத்து வருவதோடு, அரசாங்கம் அறிவித்ததை போல் தோட்ட தொழிலாளர்களாகிய தமக்கு 1,000 ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.