இலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து ஆகியவற்றுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் காலியில் இன்று நடைபெற்றிருந்தது.
இதில் முதலில் முதல் இன்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வெறும் 135 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
அணித்தலைவர் தினேஷ் சந்திமல் மட்டும் அதிகபட்சமாக 28ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
பந்துவீச்சில் டொம் பெஸ் ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 127ஓட்டங்களைப் பெற்றுள்ளது. ஜெனி பரிஸ்ஷோ 47 ஓட்டங்களுடனும் அணித்தலைவர் ஜோ ரூட் 66 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.