பதுளையில் இன்று (15) காலை இடம்பெற்ற விபத்தில் 6 வயது பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதுளை, அசேலபுர பகுதியை சேர்ந்த சிவனேசன் வருன் பிரதீப் எனும் 6 வயதுடைய மாணவன் பதுளை சரஸ்வதி வித்தியாலயத்தில் முதலாம் தரத்தில் இணைவதற்காக அவருடைய பாட்டி மற்றும் இரட்டை சகோதரருடன் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கன்டேனர் ரக வாகனம் ஒன்று சிறுவன் மீது மோதியுள்ளது. விபத்தில் மாணவனுடைய பாட்டி பலத்த காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.