செவ்வாய்க்கிழமை, 29 ஜூன் 2021 – ஆனி 15
நல்ல நேரம் காலை: 8:00AM – 9:00AM
பகல்: 12:00PM – 1:00PM
இராகுகாலம் மாலை: 3:00PM – 4:30PM
குளிகை பகல் 12:00PM 1:30PM
எமகண்டம் காலை: 9:00AM – 10:30AM
திதி பஞ்ஜமி, மாலை 6:12PM
நட்சத்திரம் சதயம்
மேஷம்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
ரிஷபம்
வளர்ச்சிப் பாதைக்கு செல்ல வழிபிறக்கும்நாள். அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணை புரியும்.
மிதுனம்
முன்னேற்றம் கூடும் நாள். ஆரோக்கியம் சீராகும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பால் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். பழைய கடன்களைச் சமார்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.
கடகம்
எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும் நாள். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று செயல்படுவது நல்லது. குடும்பச் செலவுகளால் கையிருப்புக் கரையலாம். வீண் வாக்குவாதங்கள் அதிகரிக்கும்.
சிம்மம்
மனதில் ஊக்கமும், உற்சாகமும் குடிகொள்ளும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோக முயற்சி கை கூடும்.
கன்னி
கருத்துவேறுபாடுகள் அகலும் நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்ய முன்வருவீர்கள். அலைபேசி வழியில் அனுகூலத் தகவல் உண்டு.
துலாம்
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். புகழ் மிக்கவர்கள் போன் மூலம் தொடர்பு கொள்வர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
விருச்சிகம்
கனிவான பேச்சுகளால் காரியங்களைச் சாதித்துக் கொள்ளும் நாள். காலை நேரத்திலேயே வருமான உயர்விற்கான வழி பிறக்கும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
தனுசு
பரபரப்பாகச் செயல்படும் நாள். பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நிச்சயித்த காரியமொன்றில் திடீர் மாற்றங்களைச் செய்ய நேரிடும். வழக்குகள் சாதகமாகும்.
மகரம்
மனக்குழப்பம் அகலும் நாள். லட்சியங்களை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.பொது வாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். ஆரோக்கியத் தொல்லை அகலும். தொழில் வளர்ச்சி உண்டு.
கும்பம்
கலகலப்பான நாள். காரிய வெற்றிக்கு கண்ணிய மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இடம் சம்பந்தமாக இருந்த பிரச்சினை அகலும். நட்பால் நன்மை உண்டு. சுபவிரயம் ஏற்படும்.
மீனம்
தன்னம்பிக்கையோடு பணிபுரிந்து தடைகளை அகற்றிக் கொள்ள வேண்டிய நாள். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். விட்டுப்போன விவாகப் பேச்சுகள் மீண்டும் வந்து சேரலாம்.