முல்லைத்தீவில் இன்று (18-01-2021) இராணுவ பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு குந்தூர் மலை மற்றும் படலைக்கல்லு ஆகிய பிரதேசங்களில் தொல்லியல் அகழ்வாராச்சி பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காக கலாசார தேசிய மரபுரிமைகள் மற்றும் கலை கலாச்சார விதுர விக்கிரமநாயக்க வருகைதந்திருந்தார்.
இந்நிலையில் முல்லைத்தீவு நகரம் மற்றும் குந்தூர் மலை, படலைக்கல்லு (கல்யாணிபுர) ஆகிய பிரதேசங்களுக்கு செல்வதற்கான பிரதான பதைகள் என்று அனைத்து பகுதிகளிலும் இராணுவத்தினரின் நடமாட்டம் வழமைக்கு மாறாக அதிகமாக இருந்தது.
இதேவேளை, குறித்த பிரதேசத்திலும் பெருமளவான இராணுவம், பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றையதினம் பாராளுமன்றக்குழுவொன்று அப்பகுதிக்கு சென்றிருந்த நிலையில் இன்று தொல்லியல் ஆகழ்வாராய்ச்சிக்கான ஆரம்ப நிகழ்வுக்கு பங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இவ்வாறான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.