முல்லைத்தீவு குந்தூர் மலை மற்றும் படைக்கல்லு எனப்படு; கல்யாணிபுர ஆகிய இரு இடங்களில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளை முன்னெடுப்பதற்காக (18-01-2021) இன்று தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அடிக்கல் நாட்டினார்.
இராணுவத்தினரும், பொலிஸாரும் புடை சூழ, தொல்லியல் திணைக்கழத்தின் பணிப்பாளர் அநுர மனதுங்க உட்பட மேலும் சில அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது புத்தர் சிலைகள் அவ்விடங்களுக்கு கொண்டுவரப்பட்டு பௌத்த வழிபாடுகள் நடைபெற்றதை அடுத்து அடிக்கல் நாட்டும் நிகழ்வு இம்பெற்றிருந்தது.
இராணுவம், பொலிஸ் ஆகியவற்றின் ஊடகப்பிரிவுகளும், கொழும்பில் இருந்து அழைத்து வரப்பட்ட ஊடகவியலாளர்களும் முதலில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் பிரதேச ஊடகவியலார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும், சில மட்டுப்பாடுகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குருந்தூர் மலை மற்றும் படலைக்கல்லு(கல்யாணிபுர) ஆகிய பிரதேசதங்களில் 1932ஆம் ஆண்டு இலங்கையின் வரைபடத்திற்கு அமைவாக ‘குருந்துகாசேவ’ விகாரையும் அதனோடு அண்மித்த பகுதிகளும் இருந்ததாக தொல்லியல் துறையினர் கூறியுள்ளதோடு அதன் காரணமாகவே அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனினும், புத்தர்சிலைகள் அப்பகுதிக்கு எடுத்துச் சென்று மத அனுஷ்டானங்கள் செய்யப்பட்டதன் பின்னர் மீண்டும் அவை மாயமாகியுள்ளமை புத்தவிகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டதா என்றசந்தேகங்களை ஏற்படுத்துவதாக கூறப்படுகின்றது.