யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மீள அமைக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்காக முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள நினைவுத்தூபி அமைந்துள்ள இடத்தில் இருந்து மண் சேகரிக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறு மண் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொத்துவில் முதல் பொலிகண்டிப் போராட்டம் நேற்று 05.02.2021 அன்று முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் நினைவுத் திடலுக்குச் சென்று போரில் உயிரிழந்த தமிழ் மக்களுக்காக அங்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், நினைவிடத்தின் மண், மாணவர்களால் சேகரிக்கப்பட்டது.