கொரோனா தொற்றுக்கு இலக்காகிய நிலையில் தனிமைப்படுத்துக்கு உள்ளாகியிருந்த ஸ்ரீலங்கா முஸ்லம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
அவர் 2310112021 அன்று காhலையில் கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்திற்கு திரும்பிய நிலையில், தனது முகநூல் ஊடாக அந்த செய்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
தனிமைப்படுத்தல் காலத்தில் தன்னை கவனித்துக்கொண்ட சுகாதார துறை ஊழியர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளதோடு, அக்காலத்தில் தனக்காக பிரார்த்தனை செய்த, கரிசனை கொண்டவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை கூறியுள்ளார்.
அத்துடன் அவருடைய பேத்தியிடமிருந்து வரவேற்பு தகவல் குறிப்பும் மகளிடமிருந்து சுவையான பிரியாணி உணவும் கிடைத்திருப்பதையும் பூரிப்புடன் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.