மூன்று இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்க தீர்மானித்துள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதரகம் இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சினோபாம் என்னும் நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தே இவ்வாறு வழங்கப்பட உள்ளது.
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வரும் நட்புறவின் அடிப்படையில் இந்த கொரோனா தடுப்பூசி வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கைகளின் ஓர் கட்டமாக இலங்கை அரசாங்கம் சீனாவிடம் இந்த தடுப்பூசிகளை கோரியுள்ளது.