மட்டக்களப்பு படுவான்கரை பெருநிலம பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு கிராம சேவையாளர் பகுதியில் மேய்ச்சல் தரை காணிகளை ஊர்காவல் படையினர் அத்துமீறி காடழிப்பு செய்து மேச்சல்தரையை அபகரிப்பது தொடர்பாக 20/01/2021 அன்று கொக்கட்டிச்சோலையில் இருந்து பட்டிப்பளை வரையும் பேரணியாக கவனீர்ப்பு போராட்டம் இடம்பெற்று பிரதேச செயலாளருக்கு மகஜர் கையளிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கருணாகரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளருமான பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண முன்னாள் உறுப பினர் மா.நடராசா, பட்டிப்பளை தவிசாளர் சி.புஷ்பலிங்கம், வெல்லாவெளி தவிசாளர் ரஜனி, வவுணதீவு தவிசாளர் சண்முகலிங்கம் பட்டிப்பளை பிரதளச்சபை உறுப்புனர்கள் பண்ணையாளர்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட காத்தமல்லி தோட்டம், வெட்டிப்போட்டசேனை போன்ற பல பகுதிகளில் உள்ள சுமார் 1500 காணிகள் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு காடுகள் அழிக்கப்பட்டு குறிப்பிடத்தக்கது
கொக்கட்டிச்சோலை சந்தியில் இருந்து பட்டிப்பளை பிரதேச செயலகம் வரை கவன ஈர்ப்பு போராட்டம் இடம்பெற்று பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டபோது்தாம் இதுதொடர்பாக மேலதிகாரிகளின் கவனத்திற்கு இதனை கொண்டுவருவதாக கூறினார்,
கெவிளியாமடு பகுதியானது கடந்த நூறு வருடங்களுக்கு மேலாக மேச்சல் தரையாக பண்ணையாளர்கள் மாநாவாரி நெற்செய்கை மைடியும்வரை அந்த இடத்தில் ஒவ ஙவரு வருடமும் மாடுகளை கொண்டு செல்வது வழமையாகும்.