கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்தியாவின் முதலீட்டில் அபிவிருத்தி செய்யலாம் என்றும் அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, புதுடெல்லியுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கிழக்கு, முனையத்தை இந்தியா, ஜப்பானின் பங்களிப்புடன் அபிவிருத்தி செய்யும் உடன்பாட்டுக்கு முரணாக, அதனை முழுமையாக இலங்கையே அபிவிருத்தி செய்யும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கருத்து வெளியிட்டுள்ள துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சர், ரோஹித அபேகுணவர்த்தன, மேற்கு முனையத் திட்டம் தொடர்பாக இந்தியாவுடன் கலந்துரையாடுவதற்கு, அமைச்சரவை உப குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, 02/02/2021 அன்று கொழும்பில் நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன, இந்தியாவின் நெருங்கிய உறவை இலங்கை மதிக்கிறது என்றும், கிழக்கு முனைய விவகாரம் குறித்து இந்தியாவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.