மொடேர்னா நிறுவனம் தனது கொரோனா பூஸ்டர் ( booster) தடுப்பூசியை அங்கீகரிக்குமாறு, கனேடிய சுகாதாரத் துறையிடம் கோரியுள்ளது. அத்துடன், தனது பூஸ்டர் ( booster ) தடுப்பூசியின் தரவுகளையும் குறித்த நிறுவனம் கனேடிய சுகாதாரத் துறையிடம் சமர்ப்பித்துள்ளது.
இது குறித்த விண்ணப்பத்தை மொடேர்னாவிடம் இருந்து பெற்றதாகக் கூறும் கனடிய சுகாதாரத் துறை,, சுயாதீனமானதும் சான்றுகள் அடிப்படையிலுமான மதிப்பாய்வை நடத்துவதாக தெரிவித்துள்ளது.
கனடாவில் பொது சுகாதார நிறுவனமும்,தடுப்பூசி நிபுணர்களும் பெரும்பாலான கனேடியர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை பரிந்துரைப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.