தேசிய இரத்த மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கு அமைய யாழ். மாவட்ட மின்னியலாளர்களின் ஏற்பாட்டில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் யாழ் மாவட்ட லயன்ஸ் கழகம் ஆகியன இணைந்து இரத்த தான முகாமொன்றை யாழ் மாவட்டத்தில்நடத்தவுள்ளது.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நாளை காலை 8 மணி முதல் நடைபெறவுள்ளது. எனவே யாழ் மாவட்ட மக்கள் உயிர்க்காக்கும் இரத்ததான நிகழ்வில் பங்குபற்றுமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் யாழ் மாவட்ட லயன்ஸ் கழகம் ஆகியன இணைந்து அழைப்பு விடுத்துள்ளன.